ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1.500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆற்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவிகள் பலர் சைக்கிள், அரசு பஸ்களில் வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆற்காடு அண்ணா சிலை அருகில் மற்றும் கண்ணமங்கலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் பஸ்களில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்து செல்கின்றனர். கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் இல்லை. அங்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், ஆற்காடு.