ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் லட்சுமி சரஸ்வதி பஞ்சாலை மில் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் தற்போது பயணிகள் நிற்பதற்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. அது மட்டுமல்ல தற்போது சாலை அதிக அளவில் உயர்ந்து விட்டதால் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பயணிகள் நிழற்கூடம் தாழ்வாக உள்ளது. நிழற்கூடம் முகப்பில் செடி, கொடிகள், புல் வளர்ந்துள்ளது. எனவே அந்த நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?
-பாலு, சேவூர்.