கொட்டாரம் அருகே அகஸ்தியர் புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது ஆகாயத்தாமரை வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதன்காரணமாக குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராம்தாஸ், சந்தையடி.