ராமநாதபுரம் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் சாலையில் பயணிக்கும் பெண்கள், சிறுவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த தெருநாய்கள் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வருமா?