கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2026-07-19 18:55 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் கிராமத்தில் மழைநீர் வடிகால் தூர் வாராமல் உள்ளது. அதில் செடி, கொடிகள், புல் ஆகியவை வளர்ந்துள்ளது. அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் செல்லவில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜன், அவளூர். 

மேலும் செய்திகள்