பாவூர்சத்திரம் அருகே குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுக்காட்டுவலசை புதுமனை தெருவில் 40 ஆண்டுகளாக பயன்படுத்திய பொதுப்பாதையை சிலர் அடைத்து விட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பாதை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.