ஆற்காடு-வாலாஜா மார்க்கத்தில் பைபாஸ் சாலையில் எஸ்.எஸ்.எஸ்.கல்லூரி எதிரிலும், அந்தக் கல்லூரிக்கு அருகிலும் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அங்கு பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. பயணிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், உள்ளூர், வெளியூர் பயணிகள் வெயில், மழை நேரத்தில் சிரமப்படுகின்றனர். அந்தக் கல்லூரியின் அருகிலும், எதிரிலும் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.