வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பாலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளை சுற்றி வாகன ஓட்டிகள் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் அமருவதற்கு சிரமப்படுகின்றனர். புதிய பஸ் நிலையத்தின் அருகிலேயே பார்க்கிங் வசதி உள்ளது. அவற்றை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் இதுபோல் பயணிகளுக்கு இடையூறாகச் செயல்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிகுமார், வேலூர்.