ஜவ்வாதுமலையில் ஆட்டியானூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு படித்த இளைஞர்களும் உள்ளனர். மலைக் கிராம மக்கள் தினமும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், மாணவ-மாணவிகள் தங்களை போட்டித் தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளவும் கிளை நூலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.