வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தை அருகே ஆற்காடு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லை. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினால் கூட கால்வாயில் விழும் சூழ்நிலை உள்ளது. விபரீதம் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
-மாயவன், வேலூர்.