சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியானூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-2022ம் ஆண்டு நிதியில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் புதிதாக வாரச்சந்தை கட்டப்பட்டது. இந்த வாரச்சந்தை கட்டப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய வாரச்சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.