நீர்நிலையில் கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நீர்நிலைப் பகுதியில் உள்ள சில கடைகளை மட்டும் அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மெயின் ரோட்டில் உள்ள கடைகள் அகற்றப்படவில்லை. இதேபோன்று பொன்னியம்மன் கோவில் தெரு, சிவராஜ் பேட்டை தண்டபாணி கோவில் தெரு பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.