கூலி வழங்க வேண்டும்

Update: 2023-04-02 17:11 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பலர் வேலை செய்து வருகின்றனர். இதில் சில ஊராட்சிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர கூலி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேட்டால் அரசிடம் இருந்து பணம் வரவில்லை எனக் கூறுகின்றனர். இதனால் 100 நாள் வேலை திட்டத்துக்குச் செல்லும் பெண் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிலுவையில் உள்ள 100 வேலை திட்ட கூலியை விைரந்து வழங்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்