வேலூர் கோட்டை காவல் உதவி மையத்தில் வடக்குப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இப்போது அந்த மையம் போலீசார் இன்றி வெறிச்சோடி பயன்பாடற்றுக் கிடக்கிறது. புகார் மற்றும் தகவல் கேட்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் அந்த உதவி மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்று உடைத்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை உயர் அதிகாரிகள் காவல் உதவி மையத்தில் நிரந்தரமாக போலீசார் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.