திருப்பத்தூர் சி.கே.சி. நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையோரம் அடிபம்பு ஒன்று உள்ளது. இந்த அடிபம்பை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அங்கு, சாலை பணி மேற்கொள்ளும்போது அடிபம்பை சுற்றி உயரமாக சாலை அமைத்து விட்டனர். இதனால், பொதுமக்கள் குடங்கள் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தி விட்டனர். எனவே அங்கு தண்ணீர் பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தூர்வாரப்படாமல் உள்ளது. அதை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், திருப்பத்தூர்.