திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள இலவச சுகாதார வளாகம் சுத்தமில்லாமல் பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுகாதார வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முன்வர வேண்டும்.
-புகழ், திருவண்ணாமலை.