வாலாஜா பஸ் நிலைய பகுதியையொட்டி உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு, காந்தி சிலை சதுக்க தெருக்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். அந்த 2 தெருக்கள் வழியாக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளன. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 2 தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?
-ஜெகநாதன், வாலாஜா.