வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அரசு வங்கி அருகே தேவையின்றி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. அந்தக் கற்கள் பல மாதங்களாக சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது. அந்த வழியாக நடந்து செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. வாகனங்களின் டயர்களில் கல்லடி படுகிறது. சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நெல்சன், வாலாஜா.