ஆற்காடு பஸ் நிலையத்தில் கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் அங்கு தகரங்களை கொண்டு தடுப்புகள் அமைத்து உள்ளனர். இதனால் பஸ் நிலையம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி விரைவில் பஸ் நிலைய பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-மணி, ஆற்காடு.