வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் 2 ஆழ்துளை கிணறுகள் பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. அதில் ஒரு ஆழ்துளை கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் மேற்பகுதியில் ஒரு கல்லை வைத்து அப்பகுதி மக்கள் மூடி உள்ளனர். மற்றொரு இடத்தில் பாதி கழற்றப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. விபரீதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான், வேலூர்.