தமிழகம் முழுவதும் சாலைகள், பொது இடங்களில் பேனர்கள் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. எனினும், வாலாஜாபேட்டை நகரில் தனியார் நிறுவனங்களின் விளம்பரம் பலகைகள், பிறந்தநாள், இறந்த நாள், கோவில் திருவிழா, திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், வாலாஜா.