அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்

Update: 2023-08-23 17:33 GMT

திருப்பத்தூா் நகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களுக்கு உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திருப்பத்தூர் நகர பகுதிகளிலும் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உரிய அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்