கலவை பள்ளிக்கூட தெரு, அதாவது போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் நிறுத்துகிறார்கள். மாலை வேலை முடிந்ததும் தங்களின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்வதாக தெரிகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதை, அருகில் உள்ள போலீசாா் கண்டு கொள்வதே இல்லை. அந்தச் சாலையில் ேமாட்டார்சைக்கிள்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும். வாகனங்களை நிறுத்த ஒரு இடத்தை தேர்வு செய்து தர வேண்டும்.
-ரங்கநாதன், கலவை.