மழைநீர் தேங்கும் அவலம்

Update: 2022-09-07 11:41 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கழிஞ்சூர் இ.பி.காலனி 4-வது மெயின்ரோடு 16-வது தெருவில் மழைநீர் தேங்கும் அவலநிலை உள்ளது. மழைநீர் கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற வழியில்லை. கால்வாய்களை தூர்வாராமலும், பராமரிக்காமலும் விட்டதால் தான் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

-டாக்டர் எம்.ராஜ்பாபு, கழிஞ்சூர். 

மேலும் செய்திகள்