கோவிலை புதுப்பிக்க வேண்டும்

Update: 2025-03-23 19:45 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மகிமண்டலம் கிராம மலையடிவாரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பிரதோஷம், பண்டிகை காலங்களில் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்தக் கோவில் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளது. கோவிலை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவலிங்கம், வி.சி.மோட்டூர்.  

மேலும் செய்திகள்