திருவண்ணாமலையில். கிரிவலம் செல்லும் பக்தர்கள் கோவிலில் இருந்து திருவூடல் தெரு, செங்கம் சாலை வழியாக செல்கின்றனர். திருவூடல் தெருவும், செங்கம் சாலையும் இணையும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. கிரிவலம் செல்லும் கிரிவலப்பாதையில் டாஸ்மாக் கடையா? என்று பக்தர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிரிவலப்பாதையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
-மதன், திருவண்ணாமலை.