டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

Update: 2023-06-21 13:10 GMT

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியையொட்டி ஒரு சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு அருகிலேயே கோவில், திருமண மண்டபங்கள், பள்ளிகள் உள்ளன. இதனால் பகல் மற்றும் இரவில் பெண்கள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்வதற்கு மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைக்கு அதிகமாக குடிமகன்கள் வருவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. குடிபோதையில் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொள்வதால் அடிதடிகளும் நடக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பல முறை மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அகற்றப்படவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கட்ரமணா, ஆற்காடு.

மேலும் செய்திகள்

மயான வசதி