அரக்கோணம்-சோளிங்கர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு வரும் மது பிரியர்களால் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் கல்லூரி மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பஸ் மற்றும் கனரக வாகனங்களும் அந்த இடத்தை கடந்து செல்வதற்குள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது. அங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குருமூர்த்தி, அரக்கோணம்.