வாலாஜா பஸ் நிலையம் காந்தி சிலை எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் இருந்தது. இந்த வளாக முன் பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இந்த சுற்றுச்சுவர் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே உடனடியாக பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சுற்றுச் சுவரை அகற்ற வேண்டும்.
-பாண்டுரங்கன், வாலாஜா.