பள்ளியில் அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-09-17 12:07 GMT

கலசபாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. தற்போதுள்ள கழிவறைகள் மிகவும் அசுத்தமாக உள்ளன. மேலும் கூடுதல் கழிவறைகள் கட்டப்பட வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் கழிவுநீர் விடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

-கந்தன், கலசபாக்கம்.

மேலும் செய்திகள்