வந்தவாசி தாலுகா கீழ்கொடுங்காலூரை அடுத்த காவேடு கிராமத்தில் உள்ள காவியம்மன் திருக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்த குளம் தற்போது மாசடைந்து உள்ளது. குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. திருக்குளத்தை சீர் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-பொதுமக்கள், காவேடு கிராமம்.