குடியாத்தம் செதுக்கரை அசோக்நகர் அருகில் ரூ.6 லட்சத்தில் நூலகம் கட்டப்பட்டது. ஆனால், அது மெயின் ரோட்டில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. அந்த நூலகத்துக்கு முறையான பாதை வசதி இல்லை. வாசகர்கள் நூலகத்துக்கு வந்தால் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. நூலக வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், குடியாத்தம்.