வேலூரின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கோட்டையின் வெளியே உள்ள பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று பொழுதைப் போக்கி வருகின்றனர். வடக்குப் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பூங்கா பகுதியில் பெண் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்தச் சிலையை மதுபோதையில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். அந்தச் சிலையை அழகாக சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலமுருகன், சத்துவாச்சாரி.