மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்

Update: 2023-08-16 17:27 GMT

சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைக்கு ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையில் விபத்து பிரிவு, மகப்பேறு பிரிவுகளில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கண் சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். அங்குள்ள ஒரு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். கூடுதல் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

-கோபால், சமூக ஆர்வலர், சோளிங்கர்.

மேலும் செய்திகள்