சுகாதார வளாகம் திறந்திருக்க வேண்டும்

Update: 2023-10-04 16:35 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்பக்கம் உள்ள கிரிவலப் பாதையில் விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலப் பாதையில் பல்வேறு பகுதிகளில் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுகாதார வளாகங்கள் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுகிறது. இந்தச் சுகாதார வளாகங்களை அனைத்து நாட்களிலும் திறந்து கிரிவலம் செல்லும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்