கலவை பேரூராட்சி 15-வது வார்டு புதிய காலனியில் தனியார் பள்ளி அருகே சாலையோரம் பாழடைந்த கிணறு ஒன்று பல நாட்களாக உள்ளது. அது, பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் உள்ளது. கிணறை மூடுமாறு பல முறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், விவசாயத்துக்கு செல்லக்கூடிய கூலித்தொழிலாளர்கள் செல்கிறார்கள். ஆடு மாடுகளும் செல்கின்றன. ஆபத்து ஏற்படும் முன் பயனற்ற பாழடைந்த கிணறை மூட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், கலவை.