வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனி பிரதான சாலையோரம் கோவில்கள், பள்ளி உள்ளது. அப்பகுதியில் சாலையோரம் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாறி ஒதுங்கி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையோரம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம்குமார், வேலூர்.