ஏரிக்கரையோரம் இரும்புக்கம்பி தடுப்பு தெரியவில்லை

Update: 2022-10-30 13:06 GMT

திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் காக்கங்கரை கிராமம் உள்ளது. அதன் அருகே காக்கங்கரை ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் உள்ள சாலையின் வழியாகத்தான் தர்மபுரிக்கும் திருப்பத்தூருக்கும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் ஏரிக்கரையில் விபத்துகளை தடுக்க இருபுறமும் இரும்புக்கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த இரும்புக்கம்பி தடுப்பு வெளியே தெரியாதவாறு முட்புதர் வளர்ந்து மூடி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஏரிக்கரையோரம் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும்மாறும், அதில் எதிரொலிப்பான் விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், காக்கங்கரை.

மேலும் செய்திகள்