சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் யோக நரசிம்மர் கோவில் மலையடிவாரம் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது 3 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரசிம்மன், சோளிங்கர்.