தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-10-09 12:34 GMT

வேலூர் மாநகராட்சி வார்டு எண்1-ல் செங்குட்டை பகுதியில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் திறக்கப்படுமா? என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் அந்த நூலக கட்டிட வளாகத்தில் குப்பை வண்டிகளும் நிறுத்தப்பட்டு இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டது. அந்த செய்தி எதிரொலியால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை வண்டிகளை அகற்றினர். மேலும் நூலகமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு திருவள்ளுவர் நூலகம் என்ற பெயரில் திருக்குறள் இயக்கம் சார்பில் இயங்கி வருகிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்

மயான வசதி