ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. பேரூராட்சி அதிகாரிகள் ஒரு குழு அமைத்து தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துச் சென்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.