ஆம்பூர் பை-பாஸ் சாலையில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அந்த டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விடுவதால் பை-பாஸ் சாலையில் மாலை நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
-தினேஷ் குமார், ஆம்பூர்.