சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போர், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள், பயணிகளின் செல்போன்கள், திருட்டு போவது வழக்கமாக உள்ளது. பஸ் நிலையத்தில் நடக்கும் குற்றச் செயல்களை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.