திருப்பத்தூர் அருகே உள்ள மொளகரம்பட்டி கிராமம் அருகே ெரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்தச் சுரங்கப்பாதையில் தற்போது பெய்த மழையால் 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியைச் சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆபத்ததை உணராமல் ெரயில் தண்டவாளம் மீது ஏறி செல்கின்றனர். ஆகையால் ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி மக்கள் போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டும்.
-ராமலிங்கம், மொளகரம்பட்டி.