ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா செல்லும் எம்.பி.டி. சாலையில் இரவில் மின்விளக்குகள் எரிவதில்லை. இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில் மின்விளக்குகள் எரியாததால், வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் சிரமப்படுகிறார்கள். விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இரவில் மின்விளக்குகளை அதிகாரிகள் எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர். குணசேகரன், ராணிப்பேட்டை.