வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காந்திநகர், மதிநகர், அருப்புமேடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளநீரை வெளியேற்ற காட்பாடி பகுதியில் நெடுஞ்சாலையோரம் பெரிய அளவில் கால்வாய் கட்டும் பணி தாமதமாக நடந்து வருகிறது. கால்வாய் பணி முடியாமல் நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக உள்ளது. கால்வாய் பணி நடக்கும் இடத்தில் தகர தகடுகளை கொண்டு மறைத்து பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும், என அரசு தெரிவித்துள்ளது. இதை, மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றுமா?
-பி.துரை, கல்புதூர்.