வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாகுளம் பகுதியில் விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகை பாதி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த ஊருக்கு எப்படி போக ேவண்டும்? என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வழிகாட்டி பலகையை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், வேட்டவலம்.