ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு முன்னால் பயணிகள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. பயணிகள் நடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டு இருந்தது. பாதைைய கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து, மேல் வாடகைக்கு கடை நடத்த வாடகைக்கு விடுகின்றனர். இதனால் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமலும் நடந்து செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும். மேலும் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாதிக் பாஷா, ஆற்காடு.