மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு

Update: 2022-11-16 17:08 GMT

பாணாவரத்ைத அடுத்த புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவப் பொருட்களின்றி சிகிச்சை பெற வரும் நோயாளிகளை அலைய விடுகின்றனர். அடிபட்டு ரத்த காயத்துடன் வரும் நோயாளிகளுக்கு காட்டுப்போட கூட போதிய மருத்துவப் பொருட்கள் இல்லை எனக் கூறி 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாணாவரம் அல்லது காவேரிப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

-லட்சுமணன், கர்ணாவூர்.

மேலும் செய்திகள்