ஆற்காடு ெதாகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் சிறிய அளவில் உள்ளது. அதைச்சுற்றிலும் வாகனங்கள் வருவதே தெரியாமல் ‘நோ பார்க்கிங்’ என்ற போர்டு வைத்துள்ள இடத்தையே மறைத்து ஆட்டோக்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே கணியம்பாடி பஸ் நிறுத்த பகுதியில் புதிதாக பெரிய அளவில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும்.
-சம்பத், கணியம்பாடி.